3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது
போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 3,370 சுற்றிவளைப்புகளில் 3,361 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 6 சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 72 பேர் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 38 பேரை புனர்வாழ்வுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 2 கிலோ 91 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிலோ 185 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:


No comments:
Post a Comment