மன்னாரில் சூழலியல் "கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்". மற்றும் கண்டல் தாவர பாதுகாப்பு,கழிவு முகாமைத்துவ சூழலியல் வசதி நிகழ்சித்திட்டம்.
மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு,கழிவு முகாமைத்துவம்,பனைவள முகாமைத்துவம் தொடர்பில் ஆராயும் விசேட "கொள்கை மன்றம்" ஒன்று கூடல் VOVCOD நிறுவன பணிப்பாளர் (UNDP அறிவு முகாமைத்துவ பிரிவு) த.கணேசின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அதிகளவாக காணப்படும் சதுப்பு நிலப்பரப்பில் குறிப்பாக மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் தொடக்கம் பூநகரி கிளிநொச்சி வரையான சதுப்பு நிலப்பரப்புகளில் Global Environmental Facility (GEF) உலக சூழலியல் வசதிகள் செயற்திட்டத்தின் கீழ் 7-வது நிகழ்சி திட்டத்தின் GEF/SGP/UNDP நிதியுதவியுடன் கடந்த இரண்டு வருடங்களாக சூழலியல் செயற்திட்டம் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் MARR, WECAN, USDH, Sobakantha போன்ற நிறுவனங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் HDO நிறுவனமும் சூழலியல் திட்டங்களை மேற்படி நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இச்செயற் திட்டத்தின் பங்குதாரர்களுடன் முக்கிய குறிக்கோளாக "Policy Forum" எனும் முக்கிய திட்டமும் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 9:30 மணி முதல் 2:00 மணி வரை மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலர் திரு K. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் செயற்றிட்ட உத்தியோகத்தர்கள், திட்ட உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் திட்டப்பயனாளிகள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வு விசேட அழைப்பின் பெயரில்
சிறப்பு விருந்தினராக UNDP நிறுவனத்தின் ஆய்வு பகுதி பொறுப்பாளர் புத்திக்க ஹபுஆராச்சி அவர்களும், UNDP/SGP/GEF நிகழ்ச்சி திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திருமதி தனுஜா தர்மசேன, அத்துடன் திரு திலிஷா, ஜெயவதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய சூழலியல் செயற்திட்டங்கள் தொடர்பிலான விளக்கங்கள், அதே நேரம் கண்டல் தாவர பாதுகாப்பு,பணைவள முகாமைத்துவம்,கழிவு முகாமைத்துவம் போன்ற பிரதான பிரிவுகளை ஒன்றிணைத்து வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது
அதே நேரம் சுழலியல் வசதி செயற்திட்டத்தின் கீழ் குளங்கள்,வடிகால்கள் சீரமைப்பு, கண்டல், பனைபொருள் உற்பத்தி, கண்டல் தாவர நடுகை, சதுப்பு நில முகாமைத்துவம் போன்ற செயற்திட்டங்களும் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 06, 2025
Rating:
.jpg)







No comments:
Post a Comment