அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பகீர் தகவல்; 4,289 சம்பவங்கள்!

 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதன் தலைவி ப்ரீத்தி இனோகா ரணசிங்க, 2026 ஜனவரி மாதம் வரையில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளதாகத் தெரிவித்தார்.



சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

இதன்படி, 2026 ஆம் ஆண்டு வரையில், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான மொத்தம் 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



இவற்றில் 1,683 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான அதிகபட்ச வழக்குகளாக 442 வழக்குகள் காலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இவற்றில் 101 வழக்குகள் இந்த மாதம் காலி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மேலும், குருநாகல் உயர் நீதிமன்றத்தில் 423 வழக்குகளும்,



கண்டி உயர் நீதிமன்றத்தில் 414 வழக்குகளும், பதுளையில் 206 வழக்குகளும், கம்பஹாவில் 220 வழக்குகளும், களுத்துறையில் 229 வழக்குகளும், கேகாலையில் 206 வழக்குகளும், மாத்தறையில் 216 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.




இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பகீர் தகவல்; 4,289 சம்பவங்கள்! Reviewed by Vijithan on January 24, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.