அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மன் கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு விழா - ஆடல் அரங்கம் - 2026

 ஜேர்மன் எசன் நகரத்தில் அமைந்துள்ள கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு விழா ஆடல் - அரங்கம் கடந்த 10.01.2026 சனிக்கிழமையன்று கனகசபை கலாலய பாடசாலையின் நிறுவுநரும், நடன ஆசிரியரும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவியுமான நாட்டிய நுண்கலைமாணி திருமதி.சாந்தினி துரையரங்கன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


ஆரம்ப நிகழ்வாக 

எசன் நகர சிறீகதிர்வேலாயுத சுவாமி ஆலயகுரு சிவசிறீ சாம்பசிவ சிறீதரக்குருக்களின் நடராச வழிபாட்டுப் பூசை மற்றும் ஆசியுரையுடன் ஆடல் அரங்க நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. வரவேற்புரையை திருமதி. விஜிதா ராகவன் அவர்கள் நிகழ்த்தினார்.


கலாலயத்தின் மாணவர்கள், பழைய மாணவர்களின் நடன நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வுகளை பெருந்திரளானோர் பார்த்து மகிழ்ந்திருந்தனர். நடன உருப்படிகளான புஸ்பாஞ்சலி, கீர்த்தனை, தில்லானா ஆகியவற்றோடு தசாவதரா நாட்டிய நாடகம் என்பன அனைவரையும் கவர்ந்திருந்தது. வெளிநாட்டு இயந்திரமயமான வாழ்வியல் முறைக்குள் தமது கற்றல், தொழில்முறைச் செயற்பாடுகளோடு பிள்ளைகளின் கலையார்வத்தை நடன ஆசிரியை நடன நுண்கலைமாணி திருமதி சாந்தினி துரையரங்கன் அவர்கள் நெறிப்படுத்தியிந்தார்.  அவரது இச் செயலைப் பாராட்டி “நர்த்தனாபிரியா” என்ற பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இப் பட்டயத்தினை எசன் நுண்கலைக் கல்லூரி நிறுவுநர் திரு.நயினை விஜயன் அவர்கள் வாசிக்க பன்னாகம் இணையத்தள நிர்வாகி ஊடகர் வித்தகர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கினார். 


தொடர்ந்து ஆசிரியையை  ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவை, டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை ஆகிய அமைப்புகளின் நிர்வாகத்தினரும் வாழ்த்தி மகிழ்வித்தனர். 


நடன ஆசிரியர் திருமதி. சாந்தினி துரையரங்கன் அவர்களால்  தொகுக்கப்பட்ட “மாணவர்களுக்கான பரதக்குறிப்புகள் தொகுப்பு – 1” என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந் நூலின் அறிமுக உரையினை ஆடற் கலாலய இளம் ஆசிரியர் நடனக் கலாஜோதி நிமலன் சத்தியகுமார் ஆற்றினார்.  நூலின் பிரதிகளை ஆடற் கலாலய அதிபர் திருமதி.ரெஜினி சத்தியகுமார் வெளியிட, இராஜேஸ் நர்த்தனாலய அதிபர் திருமதி. துஸ்யந்தி ஜெகதீஸ்வரன் அவர்களும் பெற்றோர்களும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நூல்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நடன ஆசிரியை திருமதி.றிசாந்தினி சஞ்சீவன் அவர்கள் நடன நிகழ்வுகள் பற்றிய கருத்துரையினை நிகழ்த்தினார். 


தொடர்ந்து  இலண்டன் தமிழ் வானொலி,பாமுக இயக்குநர், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் திரு. நடாமோகன் அவர்கள் ஆசிரியரைப் பாராட்டி வாழ்த்துரைத்தார். 


இந் நிகழ்வின் அணியிசைக் கலைஞர்களாக

* நட்டுவாங்கம் - நாட்டியநுண்கலைமாணி திருமதி.சாந்தினி துரையரங்கன்

* ⁠மிருதங்கம் - மிருதங்கக் கலாஜோதி, இசைக்கலாஜோதி திரு.கஜன் சிவபாலன்

* ⁠பாடலிசை - இசைக்கலாஜோதி, நாட்டியக் கலாஜோதி செல்வி.கார்த்திகா சிவபாலன்

* ⁠வயலின் - எசன் நுண்கலைக் கல்லூரி வயலின் ஆசிரியை, இசைக்கலாஜோதி செல்வி.சயனி நயினைவிஜயன் 

* ⁠சுரத்தட்டு - சுரத்தட்டு ஆசிரியர் பல்துறைக்கலைஞன் திரு.அன்ரன்


நன்றியுரையை பெற்றோர்கள் சார்பாக திருமதி.புளோறன்ஞ் நிகழ்த்தினார். 


சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வுகளை செல்வன்.நகுல் துரையரங்கன்,  ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.சிவகிருஷ்ணநாதன் சிவவினோபன் தொகுத்தளித்தனர். 


சுவிற்சர்லாந்திலிருந்து

து.திலகன்

















ஜேர்மன் கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு விழா - ஆடல் அரங்கம் - 2026 Reviewed by Vijithan on January 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.