அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் மருத்துவர்களின் தவறால் இலங்கை கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.


சம்பவத்தில் இலங்கையை பின்புலமாக கொண்ட 33 வயதான தனாஞ்சி டொனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




15 வார கர்ப்பிணியான தனாஞ்சி, மிட்லண்ட்ஸ் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , நீண்ட நேரம் காத்திருந்தமையினால் உயிரிழந்துள்ளதாக, பெண்ணின் கணவன் கவலை தெரிவித்துள்ளார்.


செப்சிஸ் எனப்படும் தொற்று பாதிப்பால் தனாஞ்சி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2024 ஒக்டோபர் மாதம், தனாஞ்சிக்கு கடுமையான வயிற்று வலியும் உதிரப்போக்கும் ஏற்பட்டுள்ளது.


ரோயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார் என, கடந்த திங்கட்கிழமை நார்த் ஸ்டாபோர்ட்ஷயர் கரோனர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனைக்கு வந்த 15 நிமிடங்களுக்குள் அவர் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால், 2 மணிநேரம் 3 நிமிடங்கள் கழித்தே முதல் கட்டப் பரிசோதனை நடந்துள்ளது.


உயிரிழந்த இலங்கை கர்ப்பிணி பெண்ணுக்கு செப்சிஸ் (Sepsis) தொற்று இருப்பதைக் கண்டறியும் கருவிகளை மருத்துவமனை ஊழியர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  






பிரித்தானியாவில் மருத்துவர்களின் தவறால் இலங்கை கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் Reviewed by Vijithan on January 31, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.