மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக மன்னார் சாந்தி புரத்தில் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு
மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மையத்தினுடாக 123 ஆவது வீடு மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த வருடம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்று தீ அனர்த்தத்தில் முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியது.
குறித்த குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்றீடாக புதிய வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு வீடு அமைக்கும் பணிகள் இடம் பெற்றது.
அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 123 வது வீடாக அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் தலைவர், பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீட்டை பயனாளியிடம் கையளித்தனர்.
Reviewed by Vijithan
on
January 26, 2026
Rating:







No comments:
Post a Comment