மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் அஞ்சலோட்ட திருவிழா -2026
மன்னார் மாவட்ட மெய் வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில், மனோன்மணி அறக்கட்டளை நிதியத்தின் முற்று முழுதான நிதி பங்களிப்புடன் 28. 01 .2026 மற்றும் 30. 01 .2026 ஆகிய இரண்டு தினங்களாக மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் 700க்கும் மேற்பட்ட 12 வயது தொடக்கம் 16 வயதான ஆண், பெண் போட்டியாளர்களுக்கான அஞ்சல் ஓட்ட திருவிழா நிகழ்வு முதன் முறையாக மன்னார் மாவட்ட மெய் வல்லுநர் நிகழ்வுகளின் புதிய ஒரு சரித்திரமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது விருந்தினர்களாக மன்னார் மாவட்ட செயலாளர், மற்றும் மன்னார், மடு வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், பிரதி கல்வி பணிப்பாளர்கள், மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வு முருங்கன் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
இந்த போட்டிகளின் போது ஆண், பெண் பிரிவுகள் இரண்டிலும் ஆக சேர்த்து மன்/ புனித .சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் ஆண்கள் அணி மட்டுமே 19 புள்ளிகள் பெற்று ஆண், பெண் பிரிவுக்கான முதலாம் இடத்தையும், ஆண்கள் பிரிவுக்கான முதலாம் இடத்தையும், பெற்றுக் கொண்ட அதேவேளை, பெண்கள் பிரிவில் மன்/ பற்றிமா மகா வித்தியாலயம் 12 புள்ளிகளை பெற்று பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
January 31, 2026
Rating:





No comments:
Post a Comment