மன்னார் மூர் வீதி இறைச்சி கடையும் நீளும் சர்ச்சைகளும்..
மன்னார் நகர சபையின் 24.12.2025 திகதியிலான கேள்விக்கோரலுக்கு அமைய, மன்னார் மூர் வீதி பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கடை அதிக விலை முன்மொழிவின் அடிப்படையில் இம்மானுவேல் என்பவருக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இறைச்சிக் கடைக்கானகேள்விக்கோரல் நடவடிக்கையின் போது, நகர சபையால் நிர்ணயிக்கப்பட்ட தொகையின் மூன்றில் ஒரு பகுதியை முற்பணமாக அவர் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், பின்னர் மூர் வீதி முகாய்தீன் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகம், குறித்த இறைச்சிக் கடையை அந்த நபருக்கு வழங்கக் கூடாது எனக் கடிதம் மூலம் மன்னார் நகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நகர சபையால் கேள்விக்கோரலுக்கு அடிப்படையில் முற்பணம் செலுத்திய நபருக்கு, அவர் செலுத்திய மேல்முற்பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இறைச்சிக் கடை பள்ளிவாசல் நிர்வாகத்தின் உரிமைக்குட்பட்டதாக இருந்தால், அதனை நகர சபை கேள்விக்கோரலுக்கு உட்படுத்தியது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் மூலம், அதிக விலைக்கு கேள்விக்கோரல் மூலம் கடையை பெற்ற நபர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
மேலும், இந்த விடயத்தில் மன்னார் நகர சபையின் நிர்வாக நடவடிக்கைகளில் தெளிவின்மை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல், மூர் வீதி பள்ளிவாசல் நிர்வாகமும், இறைச்சிக் கடை கேள்விக்குரலுக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இதுதொடர்பான தகவல்களை முன்கூட்டியே வழங்காதது தவறான செயற்பாடாகக் கருதப்படுகிறது.
எனவே, இவ்விவகாரத்தில் மன்னார் நகர சபையும் மூர் வீதி பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உரிய நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறான செயல்பாடுகளால் சிலர் சமூக ஊடகங்களில் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான குழப்பங்களை தோற்றுவிக்க முயல்கின்றனர் எனவே நகர சபை தலைவர் இது தொடர்பில் உரிய தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது
Reviewed by Vijithan
on
January 09, 2026
Rating:

.jpeg)
.jpeg)

.jpeg)



No comments:
Post a Comment