தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் சேவை நலன் பாராட்டு விழா-விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின்
தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடமையாற்றி தனது சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் அப் பாடசாலையின் அதிபர் ஜேசுதாசன் விஜயகுமார் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா இன்றைய தினம் புதன்கிழமை (28) பாடசாலையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த பாடசாலையில் பல வருடங்களாக கடமையாற்றி ஓய்வு பெரும் அதிபர் ஜேசுதாசன் விஜயகுமார் அவர்களை மாலை அணிவித்து இசை வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டார்.
பின் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது பாடசாலை அதிபராக கடமையாற்றி ஓய்வு பெறும் ஜேசுதாசன் விஜயகுமார் கௌரவிக்கப் பட்டதோடு ஆசிரியர் களுக்கான சேவை நலன் பாராட்டு இடம் பெற்றது.
சிறப்பு நிகழ்வாக பாடசாலையில் பணி சேவையில் நிறைவு பெறும் அதிபர் ஜே.விஜயகுமார் அவர்களின் அகவை 60 நிறைவில் பதிவுகள் 'விஜயாலயம்' என்ற மலர் வெளியீடு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
January 28, 2026
Rating:











No comments:
Post a Comment