அண்மைய செய்திகள்

recent
-

முதலாவது தொழில்நுட்ப சேவை, ஆதரவு நிலையம் வவுனியா பல்கலையில் திறப்பு

 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் முதலாவது தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு நிலையம் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது. 


விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் இது திறந்து வைக்கப்பட்டது. 

வட மாகாணத்தில் தொழில்முயற்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கல் மற்றும் ஆரம்பகட்ட வர்த்தக அபிவிருத்தி போன்ற பணிகளை இந்த தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு நிலையத்தின் ஊடாக முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். 

முதற்கட்டமாக அரச பல்கலைக்கழகங்களைச் சார்ந்தும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ரீதியாகவும் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இவ்வாறான 24 தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.




முதலாவது தொழில்நுட்ப சேவை, ஆதரவு நிலையம் வவுனியா பல்கலையில் திறப்பு Reviewed by Vijithan on January 24, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.