அண்மைய செய்திகள்

recent
-

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு: சாட்சிக்கு பிடியாணை

 வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சி ஒருவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 


குறித்த வழக்கின் 12 ஆவது சாட்சி இன்றைய தினம் (05) சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளார்.





ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு: சாட்சிக்கு பிடியாணை Reviewed by Vijithan on May 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.