அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கூடம் மடு பிரதேசத்தில் திறந்து வைப்பு.

 மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


 மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சிய அமைப்பின் நிதி ஆதரவுடன் மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற் கூடம் அமைக்கும் பணியில் இன்றைய தினம்(25)  மூன்றாவது தொழிற் கூடமாக மடு பிரதேச செயலக பிரிவில் பெரியபண்டிவிரிச்சான் கிழக்கில் இயங்கி வரும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்காக திறந்துவைக்கப்பட்டது.


6.5 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


  இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக   உதவி அரசாங்க அதிபர்  பிரதீப் அவர்களும் சிறப்பு விருந்தினர்கள்  மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சிய    திட்டப் பணிப்பாளர்      ஜேம்ஸ் பத்திநாதன் , மடு பிரதேச செயலாளர்  .கி.அ.அமல்ராஜ் , கலந்து கொண்டனர்.


 இவர்களுடன் கிராம சேவையாளர்கள் மடு பிரதேச செயலக ஊழியர்கள் கிராம மக்களும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்











மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கூடம் மடு பிரதேசத்தில் திறந்து வைப்பு. Reviewed by Vijithan on August 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.