அண்மைய செய்திகள்

recent
-

ஒக். 31க்குப் பிறகு வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் எதிர்வுகூறல்!

 வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இன்று (27) 'தெரண பிக் ஃபோகஸ்' (Derana BIG FOCUS) நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இது குறித்த மேலதிக எதிர்வுகூறல்களை வெளியிட முடியும் எனவும் தெரிவித்தார்.


தற்போது நிலவும் எல் நினோ (El Nino) நிலைமை காரணமாக இவ்வாறான தளம்பல் சூழல்கள் அடிக்கடி தோன்றக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 'அர்னாப்' போன்ற அமைப்பு உருவாகியமையால் வங்காள விரிகுடா குளிர்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு பெரிய கட்டமைப்பு உருவாகுவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் விக்ரமசூரிய விளக்கமளித்தார்.


"தற்போது அத்தகைய கட்டமைப்பு ஒன்று தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் அவதானித்துள்ளோம்.


எனினும், இவ்வாறான சிக்கலான கட்டமைப்புகள் உருவாகும்போது எதிர்வுகூறல்களின் நம்பகத்தன்மையில் சிறிது குறைபாடு காணப்படும்.


இது குறித்து நாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். வங்ககாள விரிகுடாவில் சூறாவளி அல்லது எந்த மட்டத்திலான கட்டமைப்பு உருவானாலும், அதனால் எப்போதும் மழை பெய்யும் அல்லது காற்று அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்து மக்களிடம் உள்ளது. ஆனால் அது அப்படி அல்ல. அந்தக் கட்டமைப்பு காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள காற்று வீசும் திசையைப் பொறுத்தே மழைவீழ்ச்சி கூடும் அல்லது குறையும்.


இன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கைக்குக் காற்று வீசுவது இந்தியாவின் ஊடாகவே ஆகும். இதனால் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது.


இன்று காலை அவதானித்திருந்தால் பனிமூட்டமான சூழல் காணப்பட்டது. அதனுடன் காற்றும் குறிப்பிட்ட திசையிலிருந்து வீசுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.


ஆனால் எமது தெற்கு கடற்பகுதிக்கு அப்பால் நல்ல மழை பெய்யக்கூடும். எனவே, இவ்வாறான கட்டமைப்பு ஒன்று உருவானவுடனேயே இலங்கையில் மழை அல்லது காற்று அதிகரிக்கும் என்று கூற முடியாது. மழையில் பாரிய அதிகரிப்பு எதையும் நாம் அவதானிக்கவில்லை.


எனினும் இதனை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


மத்திய-மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய 'அர்னப்' தீவிர புயலானது இன்று (27) மு.ப 11.30 அளவில் காங்கேசன்துறையிலிருந்து வட மேற்கு திசையில் சுமார் 820 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது.


இது நாளை (28) மு.ப 11.30 அளவில் 'தீவிர புயலாக' ஆந்திரப் பிரதேச கடற்கரை ஊடாக இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, இந்தக் கட்டமைப்பின் தாக்கம் இலங்கையின் வானிலையில் நாளையிலிருந்து படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டின் வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.


அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.






ஒக். 31க்குப் பிறகு வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் எதிர்வுகூறல்! Reviewed by Vijithan on October 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.