அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள்; பாதிப்பு-Photos


வவுனியா மாவட்டத்தில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான தரிப்பிடத்தில் இருந்து தமது சேவையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் தமது சக ஊழியர்கள் தாக்கப்படுவதனையும் கண்டித்து இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று (2) வியாழக்கிழமை காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தினால் புதிய பேரூந்து தரிப்பிடம் ஒன்று அண்மையில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தரிப்பிடத்தில் அரச தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போது தொடர்ந்தும் இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது.

சில நேரங்களில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை சாரதி மற்றும் நடத்துனர்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே வவுனியா மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான தரிப்பிடம் தமக்கு வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்ததோடு நேற்று(1) புதன் கிழமை முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் சாலையில் இருந்து அரச போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளமையினால் பாடசாலை மாணவர்கள், திணைக்கள அதிகாரிகள் உற்பட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக கிராமங்களுக்கான சேவைகளும் பதிப்படைந்துள்ளமையினால் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள்; பாதிப்பு-Photos Reviewed by NEWMANNAR on February 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.