க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) உயிரியில் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் உயிரியில் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் தம்மைபோன்று திறமைகளை வெளிக்காட்டியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தாம் ஆசிரியர்கள் வழங்கும் பாடங்களை அன்றன்று படித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தொடர்பில் கருத்துரைத்துள்ள கல்லூரியின் அதிபர், குறித்த மாணவன், தாம் திறமையாக படிக்கும் அதேநேரம் மற்றைய மாணவர்களுக்கும் படிப்பு மற்றும் நிதியுதவிகளை செய்யும் ஒரு மாணவன் என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி -Tamilwin
க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) உயிரியில் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்
Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:

No comments:
Post a Comment