இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவை

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பர் தெரிவித்துள்ளார். தமிழகம் திருவண்ணாமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெயர்ந்த நிலையிலும், மீள குடியமர்த்தப்பட்ட நிலையிலும் உள்ள மக்களுக்காக மத்திய அரசாங்கம் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு வேலைத் திட்டங்களை கொண்டுள்ளது. எனினும் தற்போது இலங்கையில் தேர்தல் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இந்த வேலைத்திட்டங்கள் யாவும், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:

No comments:
Post a Comment