அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னாரில் நடமாடும் சேவை _



நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் நடத்தப்படவுள்ள நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற உள்ளது.

யுத்தத்தினால் ஆவணங்களை இழந்த மக்கள், காலம் கடந்த பிறப்புக்களைப் பதிவு செய்தல், பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்ளல், விவாகம் மற்றும் இறப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சட்ட வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்படுகள் என்பன இந்நடமாடும் சேவையில் இடம்பெறும்.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ், சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான செயற்திட்டமாக இது இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி மன்னார் நகர பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவையானது மன்./அல்-அஸ்ஹார் மகா வித்தியாலயத்திலும், 24 ஆம் திகதி மாந்தை பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திலும், 25 ஆம் திகதி முசலி பிரதேச செயலகதிற்கான நடமாடும் சேவை சவேரியார் புரம் மத்திய மகா வித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளது.

மேற்படி சேவைகளைப் பதிவாளர் நாயகம், பிரதிப் பதிவாளர்நாயகம் மற்றும் சட்டத்தரணிகள் உட்படப் பலரும் வழங்குவர்.

ஊடகவியலாளர்களுக்கு இந்நடமாடும் சேவை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னாரில் நடமாடும் சேவை _ Reviewed by NEWMANNAR on November 04, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.