தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதை, கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை-
தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதையை அமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இரு நகரங்களுக்குமிடையில் 106கிலோமீற்றர் வரையிலான ரயில்பாதையை அமைக்க தீர்;மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் பீ.பீ.விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த அதிவேக ரயில்பாதை ஊடாக மணித்தியாலத்திற்கு 100கிலோமீற்றர் வேகம்வரை பயணிக்கக் கூடியவாறு அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத்திட்டத்திற்காக இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன் எதிர்வரும் இரு வருடங்களில் இந்த ரயில்பாதை அமைப்புப் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கிழக்கில் இன்றுமுதல் எரிபொருள் நிரம்பும் நிலையங்களை 24மணிநேரமும் திறந்து வைக்க எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இரவு 8மணியுடன் மூடப்பட்டு வந்தன. உல்லாசப் பயணிகளின் வருகையும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவுமே எரிபொருள் நிலையங்களை 24மணிநேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதை, கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை-
Reviewed by NEWMANNAR
on
December 26, 2009
Rating:
No comments:
Post a Comment