அண்மைய செய்திகள்

recent
-

தட்சணா மருதமடு பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் விநியோகம் _


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்சணா மருதமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த அமைச்சர்கள், அப்பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளனர்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சர் ரோய் பெர்ணான்டோ, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முனைஸ், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி ஆகியோர் உட்படப் பல பிரமுகர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன் போது தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் 40 மாணவர்களுக்கு முதற்கட்டமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பாடசாலைக்குத் தேவைப்படும் ஏனைய வசதிகள் குறித்தும் வந்திருந்த அமைச்சர்களதும், நாடாளுமன்ற உறுப்பினர்களதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேற்படி நிகழ்வுகள் மடு ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்திரு முரளி தலைமையில் இடம்பெற்றது. _
தட்சணா மருதமடு பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் விநியோகம் _ Reviewed by NEWMANNAR on December 04, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.