அதிர்சி செய்தி-மன்னார் மாணவர் மத்தியில் 'பாபுல்' பாவனை

மன்னாரில் 'பாபுல்' எனப்படும் போதை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதனால் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். மேற்படி பாக்கு 30 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போதை ஏற்படுத்தக் கூடிய இதனை வயது வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களும் இந்தப் பாக்குப் பாவனைக்குள்ளாகி வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்கள் இதனை பாடசாலைக்குக் கொண்டு சென்று சக மாணவர்களுக்கும் பங்கிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாடசாலையில் அதிகளவான சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி மாணவர்களைக் கண்காணிக்குமாறும் மன்னார் கல்வித் திணைக்களம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.மன்னாரில் அநேகமான மாணவர்கள் புகைத்தல் மற்றும் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ___
அதிர்சி செய்தி-மன்னார் மாணவர் மத்தியில் 'பாபுல்' பாவனை
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:

No comments:
Post a Comment