மன்னாரில் இராணுவக் காலவரண்களை கிராமங்களுக்குள் அமைக்கும் முயற்சியில் இராணுவம்!

மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்கு சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் இரண்டு காவலரன் அகற்றப்பட்டுள்ளது. யுத்தம் இடம் பெற்று வந்த காலப் பகுதியில் அமைக்கப்பட்ட மேற்படி காவலரன் யுத்தம் முடிந்த நிலையிலும் தொடர்ந்தும் அகற்றப்படாமல் அங்கு இருந்தது.
பின் சிறு சிறு சோதனைகள் அவ்விடத்தில் இடம் பெற்று வந்த போதும் காலம் செல்லச்செல்ல சோதனைக்கெடுபிடிகள் முற்றாக குறைவடைந்தது. அருகில் உள்ள மதுபானச்சாலைக்கு மது அருந்த வரும் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தினை கடமையில் இருந்த இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இராணுவம் பிரதான வீதிகளில் உள்ள காவலரன்களை அகற்றி கிராமங்களுக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாகவே மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் காவலரனை அமைக்க நடவடிக்கைகளினை மேற்கொண்ட போதும் ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து காவலரன் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
மன்னாரில் இராணுவக் காலவரண்களை கிராமங்களுக்குள் அமைக்கும் முயற்சியில் இராணுவம்!
Reviewed by NEWMANNAR
on
April 15, 2011
Rating:

No comments:
Post a Comment