அண்மைய செய்திகள்

recent
-

மாடு குறுக்கிட்டதில் விபத்து: ஒருவர் பலி

மன்னார் மதவாச்சி பிரதான வீதி ,முருங்கன் செம்மண் தீவுப் பகுதியில் இடம் பெற்ற  வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன்  இருவர் படு காயம் அடைந்துள்ளனர். 



நேற்று செவ்வாய்கிழமை 7 மணியளவில் குறித்த பகுதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போது வாகனத்துக்கு குறுக்கே மாடொன்று சென்றதால்  கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வாகனம் தடம் புரண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது .

இந்தவிபத்து சம்பவத்தில் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சின் மன்னார் மாவட்ட மீள் எழுச்சி  திட்ட செயலகத்தின் சாரதியான லோரன்ஸ் ரோனிஸ்  டி மெல் [வயது26] என்பவரே  உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்தின் நிதி உத்தியோகஸ்தரும் மற்றும் வவுனியா மாவட்ட மீள் எழுச்சி திட்ட அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். 

மாடு குறுக்கிட்டதில் விபத்து: ஒருவர் பலி Reviewed by NEWMANNAR on September 15, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.