அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை (14-10-2011) ஆரம்பமானது-பட இணைப்பு

வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை    (14-10-2011) ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.


பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அரங்கில் 'சமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள்' எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கு கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இடம் பெற்றது. இன்று மாலை நிகழ்வுகள் பிற்பகல் 3 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் சவிரியான் லெம்பேட் அரங்கில் இடம்பெறவுள்ளது. 









இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம் பெறவுள்ளது.இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த ஆய்வரங்கு நிகழ்வில் பேராளர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை (14-10-2011) ஆரம்பமானது-பட இணைப்பு Reviewed by NEWMANNAR on October 17, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.