உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைவரும் அணி திரள வேண்டும்: த.தே.கூ. _
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு அனைவருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 4 மணி வரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து கூட்டமைப்பு துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பு துண்டுப்பிரசுரங்களையும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
1.முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றி வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதன் மூலம் அம்மாவட்டத்திலுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றி இடங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் அமைதி இன்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.
2.வடக்கிழக்கு மாகாணங்களில் போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில் காணிப்பதிவு எனும் போர்வையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மோசடியான நில அபகரிப்பு செயற்பாடுகளை உடன்நிறுத்தவும்
3.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் ( அரச ஊழியர்கள் உட்பட) சிறுபான்மை இனமக்கள்; காணி, வீடு இன்றி நிர்க்கதியற்று இருக்கும் வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் படையினரது குடியேற்றத்திட்டம் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதன் ஊடாக ஏற்படும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.
இவ்வாறான எமது மக்களின் அடிப்படை செயற்பாடுகளை கண்டித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், பொது அமைப்புகள், பொதுமக்களென அனைத்து தரப்பினரும் அணிதிரள்வோம்.

Reviewed by NEWMANNAR
on
October 16, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 16, 2011
Rating:

No comments:
Post a Comment