மன்னார் பாலத்தில் நேற்று விபத்து வைத்தியர், இரு படையினர் காயம்;அந்த இடத்திலேயே வைத்தியரை விட்டுச் சென்றனர்
மன்னார் பிரதான பாலத்தில் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மன்னார் வைத்தியசாலை டாக்டர் ஒருவரும் இரு கடற்படையினரும் காயமடைந்தனர்.
கடமை முடிந்து வங்காலை நோக்கி வைத்தியர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதேசமயம் மன்னார் நோக்கி அதிவேக மோட்டார் சைக்கிளில் இரு கடற்படையினர் வந்துள்ளனர். வாகனம் ஒன்றை முந்திக்கொண்டு செல்ல முயன்ற படையினர் வைத்தியரின் மோ.சைக்கிளுடன் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் வைத்தியர் கால் முறிந்து காயமும் ஏற்பட்டன. கடற் படையினரும் காயமடைந்தனர். காயமடைந்த வைத்தியர் காசநோய்ப் பிரிவைச் சேர்ந்த யூட்ரவி பச்சைக் என்பவர் ஆவார்.
விபத்துக் குறித்து அறிந்து கொண்ட கடற்படையினர் சிலர் அங்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அந்தவேளை மன்னார் நோக்கி வந்த பஸ்ஸை மறித்து பயணி களை இறக்கிவிட்டு, காயப்பட்ட படையினரை ஏற்றிக் கொண்டு மன்னார் வைத்தியசாலை நோக்கி விரைந்தனர். ஆனால் வைத்தியரை அவர்கள் ஏற்றிச் செல்லவில்லை.
பின்னர் மன்னார் வைத்தியசாலைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து பின்னர் வைத்தியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். ஆஸ்பதிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடற்படையினர் இருவரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதாபிமானம் மரணித்து விட்டது என்று மன்னார் வைத்தியசாலை டாக்டர்களும் ஊழியர்களும் கவலை தெரிவித்தனர்.
மன்னார் பாலத்தில் நேற்று விபத்து வைத்தியர், இரு படையினர் காயம்;அந்த இடத்திலேயே வைத்தியரை விட்டுச் சென்றனர்
Reviewed by NEWMANNAR
on
October 19, 2011
Rating:
No comments:
Post a Comment