அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்புக்கு இந்தியா நிதியுதவி


மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம் கோவிலின் புனருத்தாரண பணிக்காக, 32 கோடி இலங்கை ரூபாய் அளிக்க, இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் வடபகுதியின், மன்னார் மாவட்டத்தில் உள்ள பழமையான திருக்கேதீச்சரம் கோவில் கி.பி., 7ம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஞானசம்பந்தரால், பாடல் பெற்ற தலமாகும்
இந்தக்கோவிலின் புனருத்தாரண பணி, இந்திய தொல்பொருள் துறை மற்றும் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியால் இணைந்து நடத்தப்படுவதாக, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி, இந்தக்கோவில் பணிக்கு இந்திய அரசு, 32 கோடியே, 60 லட்சம் இலங்கை ரூபாய் அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியில், இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக, அநத்நாட்டில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களில் இதுவும் ஒன்று என, இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.



வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்புக்கு இந்தியா நிதியுதவி Reviewed by NEWMANNAR on October 19, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.