அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தையடுத்து மன்னாரில் தலைதூக்கும் கலாச்சாரச் சீரழிவுகள் தடுத்து நிறுத்துமாறு ஆர்வலர்கள் கோரிக்கை!


மன்னார் கீரிதாழ்வுபாட்டுக் கடற்கரை ஓரங்களில் கலாசார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொழுதைக் கழிப்பதற்காக எந்த விதமான இடங்களும் காணப்படவில்லை.

இதனால் மக்கள் மாலை நேரங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு விடயங்களிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் பொழுதைக் கழிப்பதற்காக மன் னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரிதாழ்வுபாடு கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றனர்.இவர்கள் குடும்பம் குடும்ப மாக அங்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்,யுவதிகள் பலர் இவ்விடங்களுக்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசமானது.
அண்மைக்காலமாக மன்னார் பாலத்தடிப் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர், யுவதிகள் அவ்விடத்தில் வித்தியசமான முறையில் நடந்து கொள்கின்றனர்.இவர்களின் நடவடிக்கைகள் நாகரிகமற்ற முறையில் காணப்படுகின்றன. குடும்பத்து டன் வருபவர்களையும், பார்ப்ப வர்களையும் முகம் சுழிக்கச் செய்யும் விதத்தில் சில இளைஞர், யுவதிகள் நடந்து கொள்கின்றனர்.
முன்னர் ஊடகங்கள் மூலம் இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டுவரப்பட்ட பின் பாது காப்புப்பிரிவினர் செயற்பட்டு குறித்த பிரச்சினையைக் கட்டுப் படுத்தினர். குறித்த பிரச்சினை கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிகரித்து காணப்பட் டது. ஆனால் தற்போது குறித்த கலாசாரச் சீரழிவுகள் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரையோ ரங்களில் அதிகரித்து காணப்படுவதாக கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்தக் கடற்கரைப் பகுதிகளுக்கு அதிக மான இளைஞர், யுவதிகள் தனித்துச் செல்கின்றனர்.
இவர்களில் சிலர் பொழுது போக்கில் ஈடுபடுகின்ற போதும் பலர் கலாசாரச் சீரழிவுகளை ஏற் படுத்தும் முகமாக கடற்கரை ஓரங்களிலும்,அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளிலும் நடந்து கொள்கின்றனர். மன்னாரில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத் தில் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்படுகின்றபோது இச் செயற்பாட்டில் ஈடுபடுகின் றோர் நாளுக்கு நாள் இடத்தை மாற்றி வருகின்றனர்.

இப்படி நடந்து கொள்பவர்களில் சிலரைப் பொலி ஸார் பிடித்து விசாரணைகளை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனவே மன்னார் மாவட்டத் தில் மீண்டும் தலை தூக்கியுள்ள கலாசாரச் சீரழிவுகளுக்கு அதி காரிகளின் அதிரடி நடவடிக் கைகள் மூலமாகவே தீர்வுகாண முடியுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்



சிறப்பு செய்தி பார்வை- மன்னாரில் பெண்கள் யுவதிகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் அதிகரிப்பு-

யாழ்ப்பாணத்தையடுத்து மன்னாரில் தலைதூக்கும் கலாச்சாரச் சீரழிவுகள் தடுத்து நிறுத்துமாறு ஆர்வலர்கள் கோரிக்கை! Reviewed by NEWMANNAR on October 22, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.