விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறும் மன்னாரைச் சேர்ந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளியான கைதிக்கு கருணை காட்டப்படுமா? _

தற்சமயம் இவரது உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்று வாழ ஜனாதிபதி இவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்தில் கேட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு சிறுநீரகம் ஒன்றைத் தானம் செய்ய மனிதாபிமானம் கொண்ட நபர் ஒருவர் முன்வந்துள்ளார். ஆகவே விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள இவருக்கு பொது மன்னிப்பு வழங்கி இவரை விடுதலை செய்து முறையான சிகிச்சை பெற்று சுகதேகியாக வாழ ஜனாதிபதி கருணை காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறும் மன்னாரைச் சேர்ந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளியான கைதிக்கு கருணை காட்டப்படுமா? _
Reviewed by NEWMANNAR
on
October 23, 2011
Rating:

No comments:
Post a Comment