மன்னார் மாவட்டத்தில் திருமணமாகாத பெண்களே அதிகளவில் தற்கொலைக்கு முயற்சிப்பு
மன்னார் மாவட்டத்தில் திருமணமாகாத பெண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் ஒக்டேபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 969 பேர் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களில் 162 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த காலங்களை விடவும் தற்போது மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த வருடம் 2010 ஆம் ஆண்டு 188 பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வருடம் 2011 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 166 பேர் தற்கொலை செய்த கொள்ள முயற்சித்துள்ளனர். இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் 14 வயது தொடக்கம் 30 வயதுக்குற்பட்டவர்கள் எனவும் இதில் திருமணமாக பெண்களே தற்கொலை முயற்சியில் அதிகம் ஈடுபடுகின்றனர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் திருமணமாகாத பெண்களே அதிகளவில் தற்கொலைக்கு முயற்சிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 20, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 20, 2011
Rating:


No comments:
Post a Comment