கடனட்டை மோசடி: மன்னாரைச் சேர்ந்த ஐவர் கைது
இந்தியாவில் வைத்து கடனட்டையில் மோசடி செய்ததாக மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40.4 லட்சம் இந்திய ரூபாவும் போலி கடனட்டைகள் பலவும் மீட்கப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மற்றையவர்களின் கடனட்டை இரகசிய இலக்கம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொண்டு மோசடி செய்துள்ளதாகவும் இந்தியாவில் அவர்களுக்கு மோசடி வலையமைப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
மன்னாரைச் சேர்ந்த அன்ரனி ஆனந்தன், பிரதாப், செயிட் அபுதாகிர், வியகுமார் மற்றும் கணபதி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
.
கைது செய்யப்பட்டவர்களில் கணபதி என்பவரிடமிருந்து 20 போலி கடனட்டைகளும் 40,000 இந்திய ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடனட்டை மோசடி: மன்னாரைச் சேர்ந்த ஐவர் கைது
Reviewed by Admin
on
November 29, 2011
Rating:
Reviewed by Admin
on
November 29, 2011
Rating:

No comments:
Post a Comment