முறையற்ற அரச நியமனங்களுக்கு எதிராக த.தே.கூ எதிர் வரும் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஊர்வலம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.செல்வம் எம்.பி
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம் பெற்று வரும் முறைக்கேடான முறையிலான அரச நியமங்களுக்கு எதிராக எதிர் வரும் 14 ஆம் திகதி மன்னாhர் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்த எதிர்ப்பு ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளர்.
இவ்விடையம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,,,,
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலங்கலாக முறைக்கேடான முறையில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாவட்ட விவசாய ஆராட்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் அநீதி இடம் பெற்றுள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னாரில் நடத்த தீர்மானித்தது.எனினும் குறித்த எதிர்ப்பு ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட விவசாய ஆராட்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கு தாக்கல் செய்வதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
எமது நோக்கம் தெரிவு செய்யப்பட்ட விவசாய ஆராட்சி உற்பத்தி உதவியாளர்களின் நியமனங்களை நிறுத்தும் நோக்கம் இல்லை.
வழங்கப்பட்ட நியமனத்தில்அநீதி இலைக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த எமது இளைஞர் யுவதிகளும் உள்வாங்கப்பட வேண்டும். குறித்த நியமனத்தில் சம நிலை பேணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையற்ற அரச நியமனங்களுக்கு எதிராக த.தே.கூ எதிர் வரும் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஊர்வலம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.செல்வம் எம்.பி
Reviewed by Admin
on
December 13, 2011
Rating:

No comments:
Post a Comment