மன்னாரில் இரத்ததான நிகழ்வு
செலான் வங்கி மன்னார் கிளையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஓன்று நேற்று சனிக்கிழமை செலான் வங்கி மன்னார் கிளையில் நடைபெற்றது.
மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில், மன்னார் பொது வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எம்.எச். எம். அஷாத், வங்கி முகாமையாளர் ஏ.ஜே. போல்போர், இரத்த வங்கி வைத்திய அதிகாரி, வங்கி ஊழியர்கள் வைத்தியசாலை, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வங்கி ஊழியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், படையினர் என நூற்று கணக்கானவர்கள் இரத்ததானம் செய்தனர்.
மன்னாரில் இரத்ததான நிகழ்வு
Reviewed by Admin
on
December 19, 2011
Rating:

No comments:
Post a Comment