மன்னாரில் தொடர் மழையால் வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு
தற்போது பெய்துவரும் கடும் மழையின் காரணமாக தலைமன்னார் கிராமத்தில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, பேசாலை, காட்டாஸ்பத்திரி, வங்காலைப்பாடு, சிறுத்தோப்பு, முருகன் கோவில் ஆகிய கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டள்ளது.
இதனால் பாதீக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான குடும்பம் தமது உரவினர்களுடைய வீடுகளில் தங்கியுள்ளனர். தற்போது மழை வெள்ளத்தினால் பாதீக்கப்பட்டவர்களை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான மதிய உணவுகளை வழங்கியுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை உடன் மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மழை வெள்ளத்தின் காரணமாக பேசாலை 8ஆம் வட்டாரத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், பேசாலை முருகன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பேசாலையில் உள்ள பொதுக்கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ் தெரிவித்தார்.
இவர்களில் அதிகமானவர்கள் பெண்களும், சிறுவர்களுமாக உள்ள நிலையில் இவர்கள் தற்போது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் பிரதேச சபை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்பொது ஈடுபட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
மன்னாரில் தொடர் மழையால் வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு
Reviewed by Admin
on
December 20, 2011
Rating:
No comments:
Post a Comment