தலைமன்னாரில் பாரிய வெள்ளம்.மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம். (பட இணைப்பு)

தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் தலை மன்னார் கிராமம் மற்றும் தலை மன்னார் பியர் ஆகிய பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
. இந்த நிலையில் குறித்த கிராமங்களில் உள்ள பல வீடுகளினுள் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுடை விடுகளில் இருந்த முக்கிய ஆவனங்கள்,மின்சாதனப்பொருட்கள் என்பன வெள்ள நீரில் சிக்கியுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தலை மன்னார் கிராமம்,தலை மன்னார் பியர் ஆகிய மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது பாதீக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகள் மற்றும் பாதீப்புக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் முதலில் வெள்ள நீரை உடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதே வேளை தலைமன்னார் பியர் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் சுமார் 40 ற்கும் அதிகமான குடும்பம் மழை வெள்ளத்தினால் பாதீக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த கிராமத்திற்கு பொருப்பான கிராம அலுவலர் நேரில் வந்து தம்மை பார்க்கவில்லை என குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.

Reviewed by Admin
on
December 24, 2011
Rating:

No comments:
Post a Comment