மன்னாரில் வாசக நெஞ்சங்களின் பரிதாபம் ! (பட இணைப்பு)
மன்னார் பொது வாசிக சாலையின் வாசிப்புப் பகுதி ஒரு வாரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கிக்கிடக்கிறது. மின் வெட்டு காரணமல்ல, ஏதோ வயர் ஒன்று அறுந்துவிட்டதாகவும், அறிவித்தும் அது கண்டுகொள்ளப்படவில்லையென்றும் அங்கே கூறப்படுகிறது. இப்படி எத்தனையோ நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன. வாசிப்பதற்காக வருகை தருகின்ற பொது மக்கள் ஏமாற்றத்தோடு தினமும் திரும்பிச் செல்வது பரிதாபத்திற்குறியதாக இருக்கிறது.
வெகு தொலைவில் இருந்தும்கூட வாசிப்பதற்காக வரும் அன்பர்கள் ‘இன்னும் இது திருத்தப்படவில்லையா ..! ’ என்ற ஆதங்கத்தோடு திரும்புகிறார்கள். வாசிப்பு ஆர்வத்தை தாங்காமல், கொட்டும் வியர்வையில் இருளில் எழுத்துக்களைத் தேடி கண்ணை கெடுத்துக்கொள்பவர்களும் உண்டு. மாணவர்களிலிருந்து வயோதிபர்கள்வரை பொழுதை அறிவுத்தேடலில் கழிக்கவென்று நாடிவரும் ஒரே சரணாலயம் இது. இந்த ‘கரண்ட்’ பிரச்சினையை கொஞ்சம் திருத்தி, அப்பாவி மக்களின் பொழுது போக்குக்கு உதவும்படியாக சம்பந்தப்பட்டவர்களை மிகவும் தயவாக கேட்கிறோம்

-முத்து -
மன்னாரில் வாசக நெஞ்சங்களின் பரிதாபம் ! (பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
January 09, 2012
Rating:

No comments:
Post a Comment