திருக்கேதீச்சர ஆலய சூழலில் அறப்பணி மையமாக நிமிர்ந்து நிற்கும் சிவனருள் இல்லம்-சிறப்புக் கட்டுரை,
சிவ பூமி என்று சிறப்பிக்கப் படுகின்ற ஈழ திருநாட்டின் தலையாய சிவத்தலங்களில் முதன்மையானவற்றில் கேதீச்சரமும் ஒன்றாகும் மன்னார் மாவட்டத்தில் மாதோட்டம் எனும் வரலாற்றுக் கால புராதன நகரிலே அமைந்திருக்கும் சிவனுடைய சிவத்தலம் சைவ மக்களுடைய இதய பூமி ஆகும்
இப் பகுதியினுடைய பெருமையை சுடர்விட்டு பிரகாசிக்கும் வகையில் ஆலய சூழலில் அறப்பணி மையமாக அன்பே சிவம் என்ற உயரிய சைவ சமய கொள்கைக்கு உயிர் கொடுக்கின்ற பெரும் சிவ கைங்கரியமாக நிமிர்ந்து நிற்கின்றது சிவனருள் இல்லம் என்கின்ற ஆதரவற்ற குழந்தைகளின் புகலிடம்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இவ்வில்லம் ஆண்கள் பெண்களுக்கென தனியான விடுதி வசதிகளை கொண்டு யுத்தம் ஆழிப்பேரலை போன்றவற்றினால்
தாய் தந்தையரை இழந்த பெரும்பாலான குழந்தைகள் உள்ளடங்களாக சிறார்களுக்கு வாழ்வளித்து வருகின்றது சிவநெறிகாவலர் சிவத்திரு நமசிவாயத்தின் தளராத உழைப்பினால் இன்று எமக்குகேதீச்ச்சரம் என்கின்ற புண்ணிய பூமி தொடர்ந்தும் வழிபாடாற்றும் வகையில் பேணித் தரப்பட்டிருக்கின்றது அந்தப் பெருமகனாருக்கு மகன் தந்தைக்காற்றும் உதவியாக அவருடைய இளைய புதல்வன் வைத்திய கலாநிதி ஜெயந்திரன் நமசிவாயத்தினுடைய அர்ப்பணிப்பான மகத்தான உழைப்பின் மூலம் நிறுவப் பட்டது தான் சிவனருள் இல்லம்.அறக்கட்டளை ஆகும்.
இந்த சிவனருள் இல்லம் அறக்கட்டளை தொடங்கப் பட்ட நாளில் இருந்து இன்றைவரை பல ஆயிரக் கணக்கான அங்கவீனர்கள்,விதவைகள்,நலிவுற்றோர்,முதியோர்,ஆதரவற்ற சிறார்கள் என சமூகத்தின் அல்லலுறும் மக்களுக்கு தன்னால் ஆன பணிகளை ஆற்றிவந்து கொண்டிருக்கின்றது.மக்கள் சேவையே மகேசன் சேவை எனமக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்றி கொண்டிருக்கும் இவ் அறக்கட்டளை உடைய உதவியினால் பல அங்கவீனர்கள் செயற்கை அவயவங்களை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்புக்களுக்கான நிதி உதவியினை தொடர்ந்து பெற்றுவருகின்றனர்.அது மட்டுமன்றி யுத்தத்தினால் குடும்பத்தலைவர்களை இழந்தோ பிரிந்தோ உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மாதாந்த நிதி உதவியினையும் தொழில் வாய்ப்புக்களினையும் முதலீட்டு உதவிகளையும் செய்து வருகின்றது.
இத்தகைய பெரும்பணியை செய்துவரும் இந்த அறக்கட்டளை பிரதான பணியாக சிவனருள் இல்லத்தினை திறம்பட நடாத்தி வருகின்ற போதும் இல்லக் குழந்தைகளின் உடைய உளப் புத்துணர்வு பொழுது போக்கு வாய்ப்புக்கள் விளையாட்டு திறமைகளுக்கு களம் ஏற்ப்படுத்தி கொடுப்பதில் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றது.
ஆலயம் பதினாயிரம் நாட்டல் .................................
அன்னயாவினும் புண்ணிய கோடியாம் கோர் ஏழைக் கொழுத்தறிவித்தல் ...

Reviewed by Admin
on
January 14, 2012
Rating:

No comments:
Post a Comment