தலைமன்னார் – மதவாச்சி இடையேயான ரயில் பாதை புனரைமைப்பிற்கு இந்தியா நிதி உதவி!
தலைமன்னார் மதவாச்சி இடையே ரயில் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் உதவியுடனேயே இது இடம்பெறவுள்ளது.ரயில் சேவையை ஆரம்பிக்கும் பொருட்டு அப்பகுதிக்கான ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசு ரயில்வே திணைக்களத்தைப் பணித்துள்ளது.இதனையடுத்து அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்பாதையைப் புதிதாக அமைப்பதற்கு வசதியாக அதனைத் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மதவாச்சியிலிருந்து செட்டிகுளம், மடு, மன்னார், தலைமன்னார் ஆகிய பகுதி கள் ஊடாகச் செல்லும் ரயில் பாதையை இந்த ஆண் டின் இறுதிக்குள் புனரமைத்து ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில்பாதைப் புனரமைப்புப் பணிக ளும் துரிதப்படுத்தப்படவுள்ளன. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையே ரயில் சேவையை விரைவாக ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப் பட்டால் மன்னார் வரையான ரயில் சேவை பெரிதும் உத வும் என்பதால் இந்தியா இதில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் – மதவாச்சி இடையேயான ரயில் பாதை புனரைமைப்பிற்கு இந்தியா நிதி உதவி!
Reviewed by Admin
on
January 14, 2012
Rating:
Reviewed by Admin
on
January 14, 2012
Rating:

No comments:
Post a Comment