மன்னார், பனங்கட்டுக்கொட்டு மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை
மன்னார், பனங்கட்டுக்கொட்டு வீதியில் இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலையின் வேலையை நிறுத்துமாறும் கோரியும் மட்டுப்படுத்தப்பட்ட பனங்கட்டிக்கொட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கம், மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேலிற்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பனங்கட்டுக்கொட்டு வாழ் மக்கள் அனைவரும் கடற்றொழிலை நம்பி வாழ்கின்றவர்கள். அன்றாடம் கடற்றொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே தங்களது ஜீவனோபாயத்தையும் பிள்ளைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் செலவு செய்கின்றனர்.
இவ்வாறான நிலையில் பனங்கட்டுக்கொட்டு கிராமத்திற்குள் ஏற்ன்கனவே உள்ள மதுபானசாலையால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது அவதிப்படுகின்றோம். இதனால் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களும் பெண்களும் மதுக்கடைகள் உள்ளமையினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சிறு வயதிலேயே சிறுவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள். குடும்பங்களில் சேமிப்புக்கள் இல்லாமல் போகின்றது.
குடும்பங்களில் பொருளாதாரம் முன்னேற்றம் அற்ற நிலையில் காணப்படுகின்றது. இதனால் எமது கிராமத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையினை அகற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எமது மக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மதுபானசாலையை எமது கிராமத்திற்குள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்ன்கனவே உள்ள மதுபானசாலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள எமது சமூகம், புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசசாலையாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
கடந்த காலங்களிலும் பார்க்க எமது கிராம மாணவ சமூகம் கல்வியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றது.
இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் தொகையினை அதிகரிப்பதற்கு நாம் பல முயற்சிகளினை மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே எமது கிராமத்தில் நல்லொழுக்கமுள்ள சிறந்த சிறுவர் சமூகமும் கல்விச் சமூகமும் ஆரோக்கியமான மக்கள் சமூகமும் உருவாக வேண்டும். சமூக சீரழிவை ஏற்படுத்த வழிவகுக்கும் தற்போதுள்ள மதுபானசாலையினை அகற்றுமாறும் கிராமத்திற்குள் புதிதாக மேலும் ஒரு மதுபானசாலை அமைக்கப்படாமல் இருக்க ஆவணம் செய்யுமாறும் பனங்கட்டுக்கொட்டு வாழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் நகரசபைத் தலைவர் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Reviewed by Admin
on
February 14, 2012
Rating:

No comments:
Post a Comment