பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் முள்ளிக்குளம் மக்கள்
கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக் குளம் கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.
ஆண்மையில் மன்னாரில் இடம் பெற்ற சர்வமத மாநாட்டின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் அதிகரித்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் 10-09-2007 அன்று இடம் பெயர தொடங்கினர்.
இதன் போது முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் இடம் பெயர்ந்து வந்தனர்.இதன் போது பலர் உயிரிழந்தனர்.சிலாபத்துரையில் இருந்து முள்ளிக்குளம் நேக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தோர் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அதில் பயணித்த 12 பேருர் உயிரிழந்தனர்.
குழந்தைப்பிள்ளைகள் அதிகம் காணப்பட்டனர்.இவர்களுடைய சடலங்களை மீட்க முடியாத நிலையில் 2 வாரங்களின் பின் நான் சென்று சடலங்களை மீட்டேன்.
பின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சகல நடவடிக்கைகளும் மேற்கொண்ட பின் இரவு 12 மணியளவில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது.
இப்படிப்பட்ட அவலங்களுக்குள் முள்ளிக்குளம் மக்கள் இருந்துள்ளனர்.
10-09-2007 ஆம் ஆண்டு குறித்த துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.இந்த துயரத்துடன் இடம் பெயர்ந்த அந்த மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை.கடற்படையி னர் தற்போது அந்த இடங்களை பிடித்துள்ளனர்.அந்த ஊரையே பிடித்து காவலரன் அமைத்துள்ளனர்.
அந்த காணிகளுக்கு உரிய உரிமை மன்னார் ஆயர் என்ற வகையில் எனக்கு உள்ளது.எத்தனையோ எக்கர் கணக்காண காணிகள் உள்ளது.105 வருடங்கள் வரையிலான சகல விதமான ஆவனங்களும் எங்களிடம் உள்ளது.
-பாதுகாப்புக்காக தேவைப்படுகின்றது என்ற ஒரு சொல்லு கூட எம்மிடம் கூறாத நிலையில் காணிகள் பிடிக்கப்பட்டு காவலரன் அமைக்கப்பட்டுள்ளது.எம்மிடம் கூறியிருக்கும் பட்சத்தில் குறித்த காணிக்கு பதிலாக மக்களை குடியமர்த்த அதற்கு பக்கத்தில் இடம் கொடுக்க கூறியிருப்பேன்.
-நாட்டின் பாதுகாப்பிற்கு தேவை என்பதனை நாம் ஒத்துக்கொள்ளுகின்றோம்.ஆனால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லலையே.
-இம்மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மட்டம் வரை கொண்டு சென்றும் எந்த பலனும் இது வரை கிடைக்கவில்லை.இம்மக்களை குடியமர்த்த மாற்று இடத்தை காட்டுங்கள் என கேட்டேன்.
ஆனால் ஒரு பதிலும் இல்லை.இடம் பெயர்ந்து 5வருடங்களைத்தாண்டுகின்றது.
தற்போது அவர்கள் வீதியில் நிற்கின்றனர்.என மன்னார் ஆயர் தெரிவித்தார்.
வரும்
வரும்
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் முள்ளிக்குளம் மக்கள்
Reviewed by Admin
on
May 20, 2012
Rating:

No comments:
Post a Comment