அண்மைய செய்திகள்

recent
-

நீலச் சேனை கிராமத்தில் மிக மோசமான நிலையில் வீடுகள் மீளக்குடியேறியோர் கடும் விசனம்


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நீலசேனை கிராமத்தில் தொண்டு  அமைப்புகள் நிர்மாணித்துக் கொடுத்துள்ள வீடுகள் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையிலுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் 3 இலட்சம் ரூபா செலவில் பல வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ் வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஓடு மற்றும் மரங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. சில வீடுகளில் கூரைகளும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. 3 இலட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் குடியமர முடியாத நிலையில் தற்போது உள்ளதாகவும் அம்மக்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல்லின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
 குறித்த வீடுகளுக்கு சுமார் 3 இலட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் அவற்றின் பெறுமதி 2 இலட்சம் ரூபாவிற்கு கூட வராது எனவும் அம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீலச் சேனை கிராமத்தில் மிக மோசமான நிலையில் வீடுகள் மீளக்குடியேறியோர் கடும் விசனம் Reviewed by Admin on May 21, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.