அண்மைய செய்திகள்

recent
-

ஊடகச் சுற்றுலாவும் கருத்தரங்கும்

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கும் ஊடகச் சுற்றுலாவும் இம்மாதம் 15ஆம் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துக்கல தெரிவித்தார்.


மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு எதிர்வரும் 15ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணிவரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றையதினம் மாலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் பார்வையிடப்படும். 16ஆம் திகதி காலை முல்லைத்தீவு அபிவிருத்தி தொடர்பாகவும் மாலை மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் பார்வையிடப்படும்.

இவற்றில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஊடகச் சுற்றுலாவும் கருத்தரங்கும் Reviewed by NEWMANNAR on June 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.