அண்மைய செய்திகள்

recent
-

மொழி என்பது தேங்கிக்கிடக்கும் ஏரியன்று அது இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு ,உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்

ஆற்றின் வெள்ளம் மாற்றமின்றிச் செல்வதுபோல தோன்றினாலும், புதுப்புது வெள்ளங்கள் ஆற்றின் வாழ்க்கையை வளமாக்குகின்றன. புதுப்புதுக் கருத்துக்களை ஒரு மொழி ஏற்கும்பொழுதுதான் அம்மொழி வளர்ச்சி பெறுகின்றது. மொழி என்பது தேங்கிக்கிடக்கும் ஏரியன்றுளூ அது இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
கடந்த யூன் மாதம் 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   இம்மாநாட்டின் ஆய்வரங்குகளில் ஒன்றான கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்துறை அரங்கிற்கு தலைமை வகித்து தமிழ் நேசன் அடிகளார் உரையாற்   மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் மாவட்ட சர்வமத பேரவை மற்றும் மன்னார் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் தலைவருமான தமிழ் நேசன் அடிகளார் தனது தலைமை உரையில்  தொடர்ந்து கூறியதாவது,   பொதுவாக உலகத் தமிழ் மாநாடுகளில் புதிய கருத்துக்கள், புதிய ஆய்வு முடிவுகள்  இடம்பெற்றாலும், பெரும்பான்மையான ஆய்வுக் கட்டுரைகள் சங்க காலம் தொடக்கம் ஆரம்பித்து கடந்த கால இலக்கியங்களையே சுற்றிச் சுற்றி நிற்பதைக் காணலாhம். அரைத்த மாவையே அரைக்கும் நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் இந்த உலக தமிழ் இலக்கிய மாநாடு இலக்கியத்தையும் சமூகத்தையும் தொடர்புபடுத்தி இன்றைய நிலையையும், நாளைய நிலையையும் பற்றிச் சிந்திக்க அழைத்திருப்பது சாலப் பொருத்தமானதாகும். 'தமிழ் இலக்கியமும் சமூகமும்  - இன்றும் நாளையும்' என்னும் இத்தலைப்பு காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.  இவ்வாறான உலக மாநாடுகளின் புதிய ஆய்வுகள் புதிய முடிவுகள் தமிழுக்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்i.  ஆய்வு என்ற சொல்லின் பொருள் 'ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடாமுயற்சியோடும் நுட்பமாய் தேடுவது' என்பதாகும். இங்கே ஏதேனும் ஒன்று என்பது புதிய மெய்மைகளை குறிக்கும். சில கொள்கைவிதிகளை வகுக்கக்கூடிய அளவு, அடிப்படையான மெய்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்.   ஆய்வு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்ற றிசேர்ச் (சுநளநயசஉh) என்ற சொல் பிரஞ்சு மொழிச் சொல்லான ரிசெர்ச்சர்' (சுநஉநயசஉhநச) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஓன்றைப் பற்றி மிக அணுக்கமாகவும், நுணக்கமாகவும் தேடும் திறனை இது குறிக்கிறது. உண்மையைக் கண்டறிய உந்துகின்ற நாட்டமே ஆய்வாக மலர்கிறது. அறிவின் அடிப்படையில் சான்றாதாரங்களைக்கொண்டு உண்மை காணச் செய்யப்படும் எவ்வித முயற்சியும் ஆராய்ச்சி என அழைக்கப்படுகின்றது.  ஆய்வுக் கட்டுரையின் கருத்துக்கள் உணர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் அறிவுக்கு முதன்மைகொடுத்து எழுதப்படவேண்டும். தமிழ் பற்று, இன உணர்வு போன்ற காரணங்களினால் நமது இலக்கியம் சார்ந்த சில உண்மைகளை நாம் சொல்லத் தயங்கலாம். இது ஆரோக்கியமான நிலைப்பாடு அல்ல. உள்ளத்தில் உணர்ந்த உண்மைகளை மறைக்காமல், அஞ்சாமல் துணிவுடன் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.   வெறுமனே நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் அல்ல, மாறாக நமது ஆய்வின் முடிவுகளை, உள்ளுர உணர்ந்த உண்மைகளை ஒளிவு மறைவின்றி நாம் சொல்ல வேண்டும். நாம் வெளிப்படுத்தும் முடிவுகளை, உண்மைகளை கொள்ளுவதும் தள்ளுவதும் தமிழ் உலகத்தைப் பொறுத்தது.   தமிழாய்வை புதிய தளங்களிலும், புதிய கோணங்களிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமிழ் மொழி இலக்கிய ஆய்வைப் பொறுத்தவரை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. பொருளியல், வரலாறு, அறிவியல் போன்ற துறை சார்ந்த ஆய்வுகள் நாடனைத்திற்கும், பல மொழியினருக்கும் பொதுவானவை. எனவே அவற்றின் தரம் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழாய்வுகள் அனேகமாக தமிழ் பேசுபவர்களால்தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் ஆய்வுகள் குறுகிய வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவதால் அவற்றின் தரம் பற்றி அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகின்றது.




படங்களுக்கான விளக்கம் :
உலகத் தமிழ் இலக்கிய விழாவின் ஆரம்ப விழாவில் பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும்  கலைப்புலவர் க. நவரத்தினம் ஆய்வரங்கில் தமிழ் நேசன்; அடிகளார் தலைமை வகித்து அமர்ந்திருப்பததையும் காணலாம்.

மொழி என்பது தேங்கிக்கிடக்கும் ஏரியன்று அது இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு ,உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Admin on June 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.