இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற தமிழ் மொழிக் கண்காட்சி – 2012
வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து வருகைதந்த திருமதி.விக்டர் லெம்பேட் ஜஉதவிக் கல்விப்பணிப்பாளர்(தமிழ் மொழி)ஸ மற்றும் திருமதி.டீ.சியான் ஜபாடஇணைப்பாளர் (தமிழ் மொழி)ஸ ஆகியோர் கண்காட்சிக் கூடத்தை நாடா வெட்டி திறந்து வைத்து மாணவர்களுடைய ஆக்கங்களைப் பார்வையிட்டதுடன் மாணவர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் இணைப்பாளர் உரையாற்றுகையில் மாணவர்களாகிய நீங்கள் புத்தகப் படிப்புடன் மட்டும் நின்றுவிடாது இதுபோன்ற உங்களுடைய திறன்களை வளர்க்கக் கூடிய செயற்பாடுகளை ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
இக் கண்காட்சியை பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டு மாணவர்களுடைய முயற்சியை பாராட்டி அவர்களுடைய செயற்பாட்டை ஊக்கப்படுத்தினர்.
இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற தமிழ் மொழிக் கண்காட்சி – 2012
 Reviewed by NEWMANNAR
        on 
        
July 14, 2012
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 14, 2012
 
        Rating: 
       
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment