சிறந்த தமிழ் புலமையும் பேச்சாற்றலும் மிக்க ஆசிரியர் செபஸ்தியார் அவர்களின் மறைவு பேரிழப்பாகும்
மன்னார் மாவட்டம் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. த. செபஸ்ரியான் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஓர் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த தேர்ச்சியும், சிறந்த தமிழ் புலமையும், கேட்போரை வசீகரிக்கச் செய்யும் பேச்சாற்றலும் மிக்க ஆற்றல் வாய்ந்த ஓர் தமிழ் அறிஞரை தமிழ் உலகம் இழந்துவிட்டது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஆசிரியர் செபஸ்தியான் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஆசிரியர் திரு. செபஸ்தியான் அவர்கள் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் நாடறிந்த தமிழ் அறிஞர் இலக்கிய கலாநிதி வித்துவான் சா. இ. கமலநாதன் அவர்களின் மாணவனாக இருந்தவர். தனது மேடைப்பேச்சுக்களின்போதும், சொற்பொழிவுகளின்போதும் அவர் தமிழ் இலக்கியங்களை மேற்கோள்காட்டிப் பேசுவது மிகவும் சுவையுடையதாய் இருக்கும். திருக்குறளிலும் சித்தர் பாடல்களிலும் அவர் சிறந்த பரிச்சியம் உள்ளவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் மன்னார் மாதோட்ட நாட்டுக்கூத்துக்களிலும் அவர் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். திருக்குறள், சித்தர் பாடல்கள், எம்பரதோர் நாட்டுக்கூத்து ஆகிய இலக்கியங்களின் பல பாடல்களை அவர் மனனம்செய்து வைத்திருந்தார். தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களுக்கு இணையாகப் பேசுகின்ற ஆற்றல் அவரிடம் இருந்தது. ஆற்றொழுக்குப்போல் சென்றுகொண்டிருக்கும் அவருடைய அழகான தமிழ் பேச்சை செவிமடுப்பவர்கள் நேரம் போவதே தெரி;யாமல் அப்பேச்சின் சுவையில் கட்டுண்டு கிடப்பர். இத்தகைய ஆற்றல் வாய்ந்த அறிஞர் இன்று நம்மிடமிருந்து விடைபெற்றது ஆழந்த கவலைய அளிக்கின்றது.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இழைப்பாற வேண்டுவதோடு அவரின் பிரிவால் துயருறும் அவரின் அன்பு மனைவி திருமதி சுகந்தி செபஸ்தியன் (வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்) அவர்களுக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.

Reviewed by NEWMANNAR
on
July 14, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment