அங்காடி வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை-மன்னார் நகர சபை _
மன்னார் நகரில் இடம்பெறும் அங்காடி வியாபாரத்தினால் மன்னார் நகரம் மாசடைவதாகத் தெரிவித்து அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மன்னார் நகர சபை முன்னெடுத்து வருகின்றது.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையிலான நகரசபையின் அதிகாரிகள் ,பணியாளர்கள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த அங்காடி வியாபாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை வழங்கி அவர்களுக்கு மனிதாபிமான முறையில் வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபை அனுமதிகளை வழங்கியுள்ள போதும் பாதசாரிகளுக்கு இடையூறாகவும்,மன்னார் நகரம் மாசடையும் வகையில் குறித்த வியாபாரப்பொருட்களின் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் மக்களால் தொடர்ந்தும் மன்னார் நகரசபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த அதிரடி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ___
அங்காடி வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை-மன்னார் நகர சபை _
Reviewed by Admin
on
July 13, 2012
Rating:

No comments:
Post a Comment