மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்-முச்சக்கர வண்டி சாரதிகள் பலர் தலைமறைவு _
மன்னார் நீதிமன்றக்கட்டிடத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ள பல முச்சக்கர வண்டிச் சாரதிகள் கடந்த புதன் கிழமை மாலை முதல் தலைமறைவாகி உள்ளனர்.
குறித்த நீதிமன்றக்கட்டடத்தொகுதி மீதான தாக்குதலின் போது வன்முறைகளைத்தூண்டிய பல முச்சக்கர வண்டிகளை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பொலிஸாரும்,குற்றப்புலனாய்வுத்துறையினரும் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நீதிமன்ற கட்டடத் தொடர் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் போன்றவற்றை விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு வவுனியாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை உதவி பொலிஸ் அத்தியட்சர் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டு அதிரடியாக செயற்பட்டு வருகின்றனர்.
-மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் சேர்ந்த அனைத்து பொலிஸாரும் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து வருகைதந்த குறித்த குழுவினர் மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவில் தமது கடமையினைத் தற்காலிகமாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குழுவினர் பல்வேறு ஆதாரங்களுடன் மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வன்முறைகளை மேற்கொண்ட பலரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜீ.எம்.சோமரத்தின தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த 3 பொலிஸ் குழுக்களில் 3 பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள்,2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கடமையாற்றி வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
July 22, 2012
Rating:

No comments:
Post a Comment