நிமலரூபனின் உடலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்வதில் சட்டமா அதிபருடன் பெற்றோர் இணக்கம்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்ததுவைக்கப்பட்டிருந்த பின்னர் ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த கைதியான நிமலரூபனின் உடலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்வதற்கம் அடக்கம் செய்வதற்குமான ஒப்பந்த வகையிலான ஒரே பிரேரணை உயர் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
நிமலரூபனின் உடலை எடுத்துச்செல்வதிலும் அடக்கம் செய்வதிலும் சட்டமா அதிபரின் நிபந்தனைகளை ஏற்பதாக இப்பிரேரணையில் நிமலரூபனின் பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்படி, இவ்விடயங்களில் நிமலரூபனின் பெற்றோர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் ஒத்துழைத்து செயற்படுவர்.
இப்பிரேரணையில் சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோவும் நிமலரூபனின் பெற்றோரின் சார்பில் வழக்குரைஞர் சாலிய பெரேராவும் கையெழுத்திட்டுள்ளனர்.
நிமலரூபனின் உடலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்வதில் சட்டமா அதிபருடன் பெற்றோர் இணக்கம்
Reviewed by Admin
on
July 22, 2012
Rating:
+(1).jpg)
No comments:
Post a Comment