மன்னார் மடு திருவிழா-5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு.2ம் இணைப்பு-,படங்கள் இணைப்பு
மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவனித்திருவிழா புதன் கிழமை இடம் பெற்ற போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமாண பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மன்னார் மடு திருத்தளத்தின் ஆவனி மாத திருவிழா தொடர்ந்து இடம் பெற்று நவநாற்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-நேற்று 14 ஆம் திகதி வேஸ்பர் திருவிழா இடம் பெற்றது.
புதன் கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் குறித்த திருநாள் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அண்றாடி,கண்டி மறைமாவட்ட ஆயர் வியாணி பெணான்டோ,குருநாகல் மறைமாவட்ட ஆயர் கரல் அன்றனி பெணான்டோ,காலி மறைமாவட்ட ஆயர் பிறேமன் விக்கிரம சிங்க,கொழும்பு மறைமாவட்ட ஆயர் மர்சுவில் சில்வா ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுத்தனர்.
குறித்த திருவிழா வின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது காணமல் போன,கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் விடுதலைக்காக கண்ணிர் மல்க பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் நகர நிருபர்
மன்னார் மடு திருவிழா-5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு.2ம் இணைப்பு-,படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 15, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 15, 2012
Rating:















No comments:
Post a Comment