மன்னார் அரச பேரூந்து வளாகத்தில்- தனியார் வாகனங்களுக்கு தடை
மன்னார் அரச பேரூந்து வளாகத்தில் நுளைந்து போக்கு வரத்து சேவைக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தண்டப்பணம் செலுத்துவதற்கான கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது.மன்னார் நகர பேரூந்து தரிப்பிட வளாகத்தினுள் பிரத்தியேக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டிருக்கின்ற போதும் அதனை வாகன சாரதிகள் கடைபிடிப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்ட்டே வருகின்றது.
இந்நிலையில்கடந்த (14.08.2012) மன்னார் அரச பேரூந்து தரிப்பிட வளாகத்தில் தனியார் வாகனங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக நீண்டபல மணிநேரங்களாக தரித்திருந்த நிலையில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேரூந்துகள் அவ்வளாகத்தினுள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியதாக மன்னார் போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனை அடுத்து பேரூந்து தரிப்பிட வளாகத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் அங்கு நிறுத்தி வைக்கப்ட்டிருந்த வாகனங்களுக்கு அதே இடத்தில் தண்டப்பணம் செலுத்துவதற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்கியிருக்கின்றனர்.
எதிர் வரும் காலங்களில் தணியார் வாகனங்கள் அரச பேருந்து தரிப்பிடத்தினுளு; நிறுத்தி வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மன்னார் அரச பேரூந்து வளாகத்தில்- தனியார் வாகனங்களுக்கு தடை
Reviewed by NEWMANNAR
on
August 16, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 16, 2012
Rating:


No comments:
Post a Comment