லயன் எயார் விமானத்தின் பாகங்களை கடலிலிருந்து மீட்கும் பணி நாளை ஆரம்பம்
விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லயன் எயார் பயணிகள் விமானத்தின் உதிரிப் பாகங்களை கடலில் இருந்து மீட்கும் பணிகள் நாளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டு 48 பயணிகள் மற்றும் ஏழு விமானப் பணியாளர்களுடன் பலாலியிலிருந்து இரத்மலானையை நோக்கி புறப்பட்டபோது சில வினாடிகளுக்குள் ராடார் திரையிலிருந்து மறைந்து விமானம் காணாமல் போனது.
இச் சம்பவம் மன்னார் கடலில் வடக்கு பகுதியிலேயே இடம்பெற்றது. இதனை தேடும் நடவடிக்கைகள் கடந்த பல வருடங்களாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும் கடற்படையினராலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்குள் முன்பதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்படி விமானத்தின் பாகங்கள் விழுந்திருக்கக் கூடிய கடற்பிரதேசத்தைச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் பின்னர் அங்கு சோதனையிட்ட போதே கடற்படைகளால் ஊர்ஜிதம் செய்ய முடிந்தது. நாளை லயன் எயார் விமானத்தின் பாகங்களை கடலிலிருந்தும் மீட்கும் பணியினை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்படையின் பேச்ச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர் கோசல வர்ணகுலரிய தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 29, 2012
Rating:

No comments:
Post a Comment